ரொனால்டோ மிரட்டல்: போர்த்துக்கல் வெற்றி!

Tuesday, November 15th, 2016

உலகக்கிண்ண் கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை வீழ்த்தியுள்ளது.

32 அணிகள் இடையிலான உலகக்கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது.இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் போர்த்துக்கல்- லாத்வியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் போர்த்துக்கல் அணியின் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 28வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.அதே போல் அவர் 85வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து வில்லியம் கார்வால்ஹோ 70வது நிமிடத்திலும், புருனோ ஆல்வ்ஸ் 90வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

லாத்வியா அணி தரப்பில் அர்துர்ஸ் 67வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் போர்த்துக்கல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை வீழ்த்தியது.

4வது ஆட்டத்தில் ஆடிய போர்த்துக்கல் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.அதேபோல் 4வது ஆட்டத்தில் ஆடிய லாத்வியா அணிக்கு இது 3வது தோல்வியாகும்.இந்த பிரிவில் 4 ஆட்டத்தில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று சுவிட்சர்லாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: