ரொனால்டோ அதிரடி : 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

Thursday, June 21st, 2018

2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் மேலும் மூன்று போட்டிகள் இடம்பெற்றன.

குழு பீ யில் போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் போர்த்துக்கல் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அத்துடன், குழு ஏ யில் இடம்பெற்றுள்ள சவூதி அரேபியா மற்றும் உருகுவே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் உருகுவே அணி 1:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

மற்றுமொரு போட்டியில் குழு பீ யில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்பெயின் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குழு சீ யில் இடம்பெற்றுள்ள டென்மார்க் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியும், பிரான்ஸ் மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியும், குழு (டி)யில் இடம்பெற்றுள்ள ஆர்ஜன்டினா மற்றும் குரேஸியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Related posts: