ரொனால்டினோ அதிரடி: கோவா அசத்தல் வெற்றி!
Monday, July 18th, 2016ரொனால்டினோ அடித்த 5 கோலால் கோவா அணி 7-2 என பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்திய உள்ளுர் அணிகள் பங்கேற்று விளையாடி வரும் பிரிமியர் புட்சால் லீக் தொடரில் சென்னையில் நடந்த லீக் போட்டியில் கோவா – பெங்களூர் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கோவா அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டினோ முதல் கோல் அடித்தார். இதற்கு 10வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மேக்கிமிலியானோ ஒரு கோல் அடித்து சமன் செய்தார். தொடர்ந்து 15வது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் பியர்ஸ் கோல் அடித்து அசத்தினார்.
இதைதொடர்ந்து கோவா அணி தலைவர் ரொனால்டினோ 19வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோலடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 32வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கோவா அணிக்கு மார்ஷல் 33வது நிமிடத்தில் கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் ரபெல் ஒரு கோல் அடித்தார்.
கடைசி நிமிடத்தில் கோவா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணடித்த ரொணால்டினோ, ஒரு சில வினாடிகளில் தனது 5வது கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டநேர முடிவில் கோவா அணி 7-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இதனையடுத்து, சென்னை-கொச்சி அணிகள் மோதிய லீக் ஆட்டம் 4-4 என டிராவில் முடிந்தது
Related posts:
|
|