ரொஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் நேருக்கு நேர் மோதல்!

Tuesday, January 1st, 2019

பிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளனர்.

ஹொப்பென் கிண்ணத்துக்கான கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெறவுள்ளது.

இதில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஃப்ரான்செஸ் ஷியாஃபோ ஆகியோர் ஒரே அணியில் உள்ள நிலையில், ரொஜர் பெடரர், பெலின்டா பென்சிக் உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

வில்லியம்ஸ் மற்றும் பெடரருக்கு இடையில் நேரடி மோதல் இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

37 வயதான அவர்கள் இருவரும் மொத்தமாக 43 க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.