ரொஜர்ஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்வரேவ்!

Wednesday, August 16th, 2017

உலகின் 7ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் இளம் வீரர் அலெக்சான்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) முதன் முறையாக ரொஜர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார்.

கனடாவின் மொன்றியால் நகரில் இடம்பெற்று வந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியில், விம்பிள்டன சாம்பியன் ரொஜர் பெடரரை வீழ்த்தி, இவர் கிண்ணம் வென்றுள்ளார்

இந்த தொடரின் இறுதிப் போட்டி கனடாவின் QUEBEC மாநிலத்தின் MONTREAL நகரில் நடைபெற்றது.போட்டி ஆரம்பமாவதற்கு முன்பே, விம்பிள்டன் சாம்பியன் பெடரர்தான் கிண்ணம் வெல்வார் என, பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் அந்த எதிர்ப்பார்ப்பை அலெக்சான்டர் ஸ்வரேவ் தகர்த்துள்ளார்.இறுதிப் போட்டியில் பெடரருக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், 6-3, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று, முதன் முறையாக ரொஜர்ஸ் கிண்ணத்தை முத்தமிட்டுள்ளார்.

Related posts: