ரெய்னாவை தொடர்ந்து டோனியும் விலகல்?

Tuesday, April 17th, 2018

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டோனி முதுகில் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

11-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, நேற்று முன்தினம் சென்னை – பஞ்சாப் அணிகள் இடையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

சென்னை அணியின் முக்கிய வீரர்கள் பலர் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாகி விட இறுதி வரை அணியை வெற்றி பெற வைக்க அணித் தலைவர் டோனி போராடினார்.

ஆனாலும் நூலிழையில் சென்னை அணி தோல்வியடைந்தது. இப்போட்டியின் நடுவில் டோனி முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, சென்னை அணியின் பிசியோ அவருக்கு முதலுதவி செய்தார்.

ஆட்டம் முடிந்து அதுபற்றி டோனியிடம் கேட்கப்பட்ட போது, அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார். இதனால், 20ஆம் திகதி ராஜஸ்தான்அணியுடன் நடக்கும் போட்டியில் அவர் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் ரெய்னா இரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இப்போது, டோனியும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts: