ரியோ தோல்விக்கு பழி தீர்த்தார் சிந்து!

Saturday, December 17th, 2016

ரியோ ஒலிம்பிக்கில் தோற்கடித்த கரோலினா மரினை சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டுள்ளார் பி.வி. சிந்து.

பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கிடையே உலக சூப்பர் சீரிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொண்டார். கரோலினா ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவை தோற்கடித்து தங்கப் பதக்க கனவை சிதறடித்தவர். அதற்கு பழி வாங்க வேண்டும் என சிந்து இன்று ஆக்ரோஷமாக விளையாடினார்.

முதல் செட்டில் பி.வி. சிந்துவிற்கு கரோலினா கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் சிந்து சிறப்பாக விளையாடி 21-17 என அந்த செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டிலும் சிந்து அசத்தினார். இதனால் இந்த செட்டையும் 21-13 எனக் கைப்பற்றி நேர்செட் கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று லீக்கில் இரண்டு வெற்றிகள் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, ரியோ ஒலிம்பிக்கில் அடைந்த தோல்விக்கு கரோலினாவை பழி தீர்த்துக்கொண்டார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)

Related posts: