ரியோ ஒலிம்பிக்: முதல் நாளில் தங்க வேட்டையை தொடங்கிய நாடுகள்!
Sunday, August 7th, 2016
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில், ஆஸ்திரேலியா நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
400 மீட்டர் ஆண்கள் சுதந்திரப் பாணி (ஃப்ரீ ஸ்டைல்) நீச்சல் போட்டியில், போட்டியாளர் சுன் யாங் என்ற சீன வீரரை விட ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் மார்க் ஹோர்டன் தங்கம் வென்றார்.
அதன் பின்னர் 400 மீட்டர் பெண்கள் தொடர் நீச்சல் போட்டியில், உலக அளவில் பதிய பதிவோடு அமெரிக்காவையும், கனடாவையும் தோற்கடித்து ஆஸ்திரேலியா அணியினர் தங்கம் வென்றனர்.
ரஷியாவின் முதல் தங்கப்பதக்கத்தை 60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் பெஸ்லான் முடிராநோவ் பெற்றிருக்கிறார். ஆண்கள் சாலை மிதி வண்டி போட்டியில் பெல்ஜியத்தின் கிரெக் வான் அவர்மயட் தங்கம் வென்றுள்ளார்.
அம்பு எய்தல் போட்டியில் தென் கொரிய விளையாட்டு வீரர்கள் அணியானது அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றிருக்கின்றனர்.
Related posts:
|
|