ரியோ ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிக்க அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி!

Thursday, August 11th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு விளையாட்டு துறை வல்லரசு நாடுகளும் பல தங்க பதக்கங்களை வென்றுள்ளதால் பதக்க பட்டியலில் சீனாவை விட குறைந்தளவு வித்தியாசத்திலேயே அமெரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

மகளிர் 4×200 சுதந்திர பாணி ((ஃ பீரி ஸ்டைல்) நீச்சல் போட்டி பிரிவில் அமெரிக்காவின் கேட்டி லேடேகி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது இந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெற்ற மூன்றாவது தங்கப் பதக்கமாகும்.

மகளிர் 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மூன்றாவது வந்த எகிப்தின் பதின்ம வயது பெண் சாரா அகமது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில், பதக்கம் வென்ற எகிப்து நாட்டின் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

YEHRKR1Kஒலிம்பிக்

Related posts: