ராபாடாவுக்கான போட்டித்தடை நீக்கம் – ஐ.சி.சி!

Wednesday, March 21st, 2018

ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் உடன் முரண்பட்டதில் 2 டெஸ்ட் போட்டிககளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மீண்டும் கேப்டவுன் இல் இடம்பெறவுள்ள போட்டியில் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

தன் மீதான தடையை எதிர்த்து ரபாடா மேல்முறையீடு செய்த நிலையில், அவரது முறையீட்டினை ஆராய்ந்த ஐசிசி அவருக்கு தண்டனைப் புள்ளிகள் 1-உம் போட்டி ஊதியத்தில் 25 சதவீத அபராதமும் விதித்து தண்டனையினை குறைத்துள்ளது. இதன்படி, ராபாடாவுக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளது.