ராகுல் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்: சஞ்சய் பங்கர்!

Wednesday, March 8th, 2017

 

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல், கூடுதல் கவனத்துடன் விளையாடுவதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அரைசதம் விளாசிய லோகேஷ், தேவையற்ற வகையில் ஆட்டமிழந்தமை குறித்து விமர்ச்சிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த சஞ்சய் பங்கர், துடுப்பாட்டத்திற்கு கடுமையாக இருந்த ஆடுகளத்தில் லோகேஷை தவிர யாரும் சரியாக விளையாடவில்லை. இதை கருத்தில் கொண்டு அவர் நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அரைசதம் அடித்தால் போதும் என்ற எண்ணத்தில் தூக்கி அடித்து தேவையற்ற விதத்தில் ஆட்டமிழந்தார். அதன்விளைவு இந்தியாவை தோல்வியடையச் செய்தது.

முக்கிய தருணத்தில் அந்த பந்தை அவர் அடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைத்து நின்று ஆடுவதுதான் முக்கியம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவது அவசியம். எனவே, இனிமேலாவது அரைசதம் அடித்தால் போதாது, நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று லோகேஷ் ராகுல் தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்றார்

Related posts: