ரஹானே சதம்: இந்தியா 500 ஓட்டங்கள்!

Tuesday, August 2nd, 2016

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 196 ஓட்டங்களில் சுருண்டது. பிளாக்வுட் அதிகபட்சமாக 62 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் சுழலில் அசத்திய தமிழக வீரரான அஸ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார்.பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ராகுல் (75), புஜாரா (27) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்றுமுன்தினம் நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. இதில் அபாரமாக ஆடிய ராகுல் சதம் அடித்தார். அவர் 182 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.தமது 6-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ராகுலுக்கு இது 3-வது சதமாகும். ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்து இருந்தது. இதனிடையே ராகுல் 158 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நேற்று தொடர்ந்து விளையாடிய இந்தியா, 9 விக்கெட்களை இழந்து 500 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ராஹானே 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.304 ரன்கள் பின் தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கவுள்ளது.

Related posts: