ரஹானா நீக்கமா? -அனில் கும்ப்ளே விளக்கம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்க்ய ரஹானே கடந்த சில போட்டிகளில் தடுமாறினாலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்
இங்கிலாது போட்டியில் சரியாக சோபிக்காத ரஹானா, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சோபிக்கவில்லை. அவர் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் ரஹானேவுக்குப் பதிலாக சமீபத்தில் முச்சதம் அடித்த கருண்நாயருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அனில்கும்ப்ளே பேட்டி ஒன்றில் கூறியதாவது:
ரஹானேவை நீக்குவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. முந்தைய போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக ரன் குவித்திருக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரஹானேவை நீக்குவது தொடர்பாக இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. 16 வீரர்களுமே தயார் நிலையில் இருக்கிறார்கள் அவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|