ரஷ்யாவின் உலகக்கிண்ண கனவுக்கு ஆப்பு!

Monday, July 9th, 2018

குரேசியா அணிக்கு எதிரான போட்டியில் ரஷ்யா பெனால்டி ஷுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதிப் போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பை இழந்தது.

ரஷ்யாவில் பிபா உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்றைய போட்டியில் ரஷ்யா – குரோஷியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ் கோல் அடித்து அசத்தினார். அதன் பின் 35-வது நிமிடத்தில் குரோஷியாவின் டேஜன் ல்வ்ரெனிற்கு பவுல் காரணமாக, மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் முதல் பாதியில் 1-1 என சமநிலை ஆனது.

தொடர்ந்து 2-வது பாதியில் ரஷ்ய வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி எதுவும் நிறைவேறவில்லை.

94-வது நிமிடத்தில் ரஷ்ய அணியினர் அடித்த பந்தை, குரோஷிய கோல் கீப்பர் டனிஜெல் சுபாசிக் லாவகமாக தடுத்தார்.

90 நிமிடங்கள் நிறைந்தவடைந்த பின்னர், கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் 101 நிமிடத்தில் குரோஷியாவின் டொமாகோஜ் விடா கோல் அடித்து அசத்தினார்.

முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது. இரண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.

இதனால் போட்டி மீண்டும் 1 – 1 என சமநிலை ஆனதால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் முதல் வாய்ப்பை இரு அணிகளும் கோல் ஆக்கினர். அதன் பின் மூன்றாவது வாய்ப்பி ரஷ்யா வீணாக்கியதால் குரேசியா 1-2 என முன்னிலை பெற்றது.

நான்காவது வாய்ப்பில் ரஷ்யாவும், குரேசியாவும் கோல் அடித்ததால் போட்டி 2-2 என சமநிலை ஆனது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது

இந்த வெற்றியின் மூலம் புத்துயிர் பெற்ற இங்கிலாந்து அணியுடன் குரோஷியா மோத உள்ளது. இந்தப் போட்டி வரும் 11-ஆம் தேதி, மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.

சொந்த மண்ணில் உலகக்கிண்ணத் தொடர் நடைபெற்றதால், ரஷ்யா இந்த முறை கிண்ணத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதி போட்டியோடு ரஷ்யா வெளியேறியுள்ளது, உள்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Related posts: