ரவிசாஸ்திரியுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து கோஹ்லி !

இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ரவிசாஸ்திரியுடன் இணைந்து செயலாற்றுவதில் தமக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்
இலங்கை கிரிக்கட் அணியுடனான தொடர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று இலங்கை வரும் நிலையில், டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து விராட் கோஹ்லி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு திடலில் ஆரம்பமாகவுள்ளது.இந்திய அணி இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.இதுதவிர ஒற்றை 20க்கு20 கிரிக்கட் போட்டியிலும் விளையாடவுள்ளது.
Related posts:
ஆர்னல்ட் பாமர் காலமானார்!
540-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறிய வீரர்!
IPL போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை!
|
|