ரவிசாஸ்திரியின் சம்பள அறிவிப்பை கண்டு மிரண்டுபோன இரசிகர்கள்

Thursday, July 20th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் சம்பளத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி அவருக்கு ஆண்டுக்கு இந்திய ரூபா மதிப்பில் 7½ கோடி ரூபா சம்பளமாக வழங்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்வந்துள்ளது.கிரிக்கெட் சபை தலைவர் சி.கே.கண்ணா செயலாளர் அமிதாப் சவுத்ரிஇ நிர்வாக குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி ஆகியோர் கொண்ட 4 பேர் குழு இந்த சம்பள தொகையை முடிவு செய்துள்ளது.

மேலும்இ துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கருக்கு இந்திய ரூபா மதிப்பில் 2.3 கோடி ரூபாவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாரத் அருணுக்கு 2.20 கோடி ரூபாவும் களத்தடுப்பு பயிற்சியாளரான ஸ்ரீதருக்கு 2 கோடி ரூபாவையும் இக்குழு நிர்ணயித்துள்ளது.

Related posts: