ரசிகர்களின் கேள்விக்காக காத்திருக்கும் சங்ககாரா!

Thursday, November 3rd, 2016

இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விக்களுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் இடது கை மட்டையாளர் குமார் சங்ககாரா. இவருக்கென்றே இலங்கையில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபல தனியார் இணையதளமான ISLAND CRICKET என்ற இணையதளம் சங்ககாராவின் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.அதாவது குறித்த இணையத்தில் ரசிகர்கள் அனைவரும் நவம்பர் 4 ஆம் திகதிக்குள் தாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு விட வேண்டும் என்றும், அதில் உள்ள சிறந்த 10 கேள்விகளுக்கு சங்ககாரா பதில் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: