ரசிகர்களின் கிண்டல் குறித்து ஸ்டீவ் ஸ்மித் !

Monday, May 27th, 2019

ரசிகர்கள் என்னை எப்படி கிண்டல் செய்தாலும் பரவாயில்லை எனக்கு என் அணி வீரர்களின் ஆதரவு இருக்கிறது என்று அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடையில் இருந்தனர். அதன் பின்னர் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் இருவரும், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்கினர்.

அப்போது இங்கிலாந்தின் பார்மி ஆர்மி என்ற ரசிகர்கள் குழு ஸ்மித்-வார்னர் களமிறங்கியபோது, ஏமாற்றுக்காரர்கள் என்று கூறி கிண்டல் செய்தனர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரசிகர்களின் கிண்டல் குறித்து ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘நான் களத்தில் இறங்கியபோது ரசிகர்கள் சிலர் தேவையில்லாத வார்த்தைகளை பேசினார்கள். அதை நானும் கேட்டேன். ஆனால், அதைப் பற்றி கவலைப்படவில்லை.

அவுஸ்திரேலிய மக்களை மீண்டும் தலைநிமிரும்படி என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். எனக்கு முதல் பயிற்சிப் போட்டியே நல்லவிதமாக அமைந்துவிட்டது. அதில் அணிக்காக சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக்கோப்பைப் போட்டியின் போது, அணியில் நடுவரிசையில் அதிகநேரம் களத்தில் நின்றால் தான் ஓட்டங்கள் குவிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: