ரசலின் அதிரடி ஆட்டத்தால் கொழும்பு கிங்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி

Sunday, November 29th, 2020

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மற்றுமொரு போட்டி நேற்றிரவு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.

கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளேடியேடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற குறித்த போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

மழைக் காரணமாக இந்த போட்டியானது 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தியதாக இடம்பெற்றது.

அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி க்ளேடியேடர்ஸ் அணி, கொழும்பு கிங்ஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.

கொழும்பு அணி சார்பாக அதிரடியாக ஆடிய என்ரு ரசல் 19 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசினார்.

இதனையடுத்து, 197 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய காலி அணி 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 62 ஓட்டங்களை மாத்திமே பெற்றுக்கொண்டது. அந்த அணி சார்பாக தனுஸ்க குணதிலக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அஹமட் மற்றும் பிரியஞ்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக என்ரு ரசல் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் கொழும்பு கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: