ரங்கன ஹேரத் வீழ்த்திய 32 ஆவது ஐந்து!  

Monday, October 2nd, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி , ரங்கன ஹேரத் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்டுக்களை வீழ்த்திய 32 வது சந்தர்ப்பம் இதுவாகும்.சர்வதேச டெஸ்ட் போட்டிகள் 84 இல் விளையாடியுள்ள ரங்கன இதுவரை 394 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.தற்போதைய நிலையில் , இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்டுக்களை வீழ்த்தியவர்களில் ரங்கன ஹேரத் 5ம் இடத்தில் உள்ள நிலையில் , முதலிடத்தில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் இரண்டாம் இடத்திலும் , நியூசிலாந்து அணியின் ரிசட் ஹெட்லி மூன்றாம் இடத்திலும் மற்றும் இந்தியா அணியின் அனில் கும்ளே நான்காம் இடத்திலும் உள்ளனர்.இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 419 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Related posts: