ரங்கன ஹேரத்தை வாழ்த்திய டெண்டுல்கர்

Thursday, October 5th, 2017

பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

அதுமட்டுமின்றி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 400 விக்கெட் வீழ்த்திய 14-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதோடு இடது கையால் குறித்த இந்த சாதனையை படைக்கும் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரும் இவர் தான், 101 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 400 விக்கெட்டுகள் வீழ்த்தி இப்படி ஒரு மிகப்பெரிய சாதனை படைத்த ரங்கன ஹேரத்துக்கு வாழ்த்துக்கள் என்றும் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கும் வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: