ரங்கண ஹேரத் ஓய்வு?

டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்ததும் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிசெய்யவில்லை.
இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில் – “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம் இந்த தொடர் முடிந்த பிறகு தெரிவாளர்களிடம் கலந்தோசித்து எனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்“ என்று கூறியுள்ளார்.
Related posts:
பயிற்சிக்கு திரும்பினார் மலிங்கா!
சஞ்சயனின் அசத்தல் சதத்தினால் யாழ் மத்திய கல்லூரி வெற்றி!
ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
|
|