யூரோ 2016 :  ஆரம்ப ஆட்டத்தில் ருமேனியாவை வீழ்த்திய பிரான்ஸ்!

Saturday, June 11th, 2016

கோலாகலமாக ஆரம்பமான யூரோ 2016 போட்டிகளின் தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தியுள்ளது பிரான்ஸ் அணி.

யூரோ கிண்ண கால்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ருமேனியாவை சந்தித்தது. துவக்கம் முதலே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆதிக்கத்தை செலுத்த முனைந்தது.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் Olivier Giroud இந்த தொடரின் முதல் கோலை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருமேனிய ஆட்டத்தின் 65வது நிமிடத்தில், பிரான்ஸ் அணிக்கு பதிலடி தரும் வகையில் தங்களது அணி சார்பாக கோல் கணக்கை துவங்கியது. இந்த முறை ருமேனியாவின் Bogdan Stancu கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் Dimitri Payet அடுத்த கோல் அடித்து அணியை வலுவான நிலையில் நிறுத்தியது மட்டுமின்றி, ஆட்ட நேரம் முடியும் வரை தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி ருமேனியா அணியை மீண்டும் கோல் போடாத வகையில் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தினர்.

பிரான்ஸ் அணி தங்களது முழு திறமையும் இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தவில்லை என கூறும் விளையாட்டு ஆர்வலர்கள், தொடர்ந்துள்ள ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு இந்த வெற்றி முக்கிய உந்துதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (3)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

Related posts: