யூரோ கிண்ணம்: முதன்முறையாக அரையிறுக்கு முன்னேறி வேல்ஸ்!

Saturday, July 2nd, 2016

யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வேல்ஸ் அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.பிரான்சில் யூரோ கிண்ண கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் இன்று நடந்த 2வது காலிறுதியில் வேல்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ராட்ஜா நைன்கோலன் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.இதற்கு வேல்ஸ் அணியின் வில்லியம்ஸ் 31வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலையில் இருந்தன.

பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு ஹால் ராப்சன் கானு கோல் அடித்தார்.தொடர்ந்து ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் சாம் வோக்ஸ் மேலும் ஒரு கோல் அடித்து வேல்ஸ் அணிக்கு வலுவான முன்னிலை பெற்று தந்தார்.

வேல்ஸ் அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், பதில் கோல் அடிக்கும் முனைப்பில் ஈடுபட்ட பெல்ஜியம் அணிக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது.முடிவில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.இந்த வெற்றியின் மூலம் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.

Related posts: