யூரோ கிண்ணம்: “நாக்- அவுட்” சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!
Friday, June 24th, 2016
பிராசில் 15வது ஐரோப்பிய கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், “நாக்-அவுட்” சுற்றுக்கு 16 அணிகள் முன்னேறியுள்ளன.
இந்த தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இவை அனைத்தும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. “லீக்” சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும்.
அதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகளில் “டாப்-04” நாடுகளும் “நாக்-அவுட்” தகுதி பெறும். மற்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இந்த நிலையில் நேற்றுடன் “லீக்” ஆட்டங்கள் முடிந்தன. இதன்படி,
“நாக்-அவுட்” சுற்றுக்கு முன்னேறிய அணிகள் விவரம்
“ஏ” பிரிவு- பிரான்ஸ், சுவிட்சர்லாந்து.
“பி” பிரிவு- வேல்ஸ்,இங்கிலாந்து, சுலோவாக்கியா.
“சி” பிரிவு- ஜெர்மனி, போலந்து, வடக்கு அயர்லாந்து.
“டி” பிரிவு- ஸ்பெயின், குரோஷியா.
“இ” பிரிவு- இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு.
“எப்” பிரிவு- அங்கேரி, ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல்.
வெளியேற்றப்பட்ட அணிகளின் விபரம்
“ஏ” பிரிவு- அல்பேனியா, ருமேனியா.
“பி” பிரிவு- ரஷ்யா.
“சி” பிரிவு- உக்ரைன்.
“டி” பிரிவு- துருக்கி, செக்குடியரசு.
“இ” பிரிவு- சுவீடன்.
“எப்” பிரிவு- ஆஸ்திரியா.
Related posts:
|
|