யூரோ கிண்ணம்: தங்க ஷூ வை வென்றார் கிரீஸ்மன்!

Monday, July 11th, 2016

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம்வென்றுள்ளது.

இந்த தொடரில் பிரான்ஸ் அணியின் ஆண்டோனி கிரீஸ்மன் அதிக கோல்களை (6 கோல்கள்) அடித்து தங்க ஷூவை தட்டிச் சென்றுள்ளார்.

போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ 3 கோல்களுடன் வெள்ளி ஷூவையும், பிரான்ஸ் வீரர் ஆலிவிர் ஜிரோட் 3 கோல்களுடன் வெண்கல ஷூவையும் வென்றனர்.

மேலும், யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் தலா 9 கோல்கள் அடித்து போர்த்துகலின் ரொனால்டோவும் பிரான்ஸ் அணியின் மைக்கேல் பிளாட்னியும் உள்ளனர்.

அதேபோல் யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ரொனால்டோ தான் அதிக முறை (21 முறை) பங்கேற்றவராக இருக்கிறார்.

Related posts: