யூரோ கிண்ணம்: ஜேர்மனி, போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதி!

Wednesday, June 22nd, 2016

பிரான்ஸின், பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் யூரோ கால்பந்து தொடரில் நேற்று சி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜேர்மனி – நார்தன் அயர்லாந்து மோதின.

முடிவில் ஜேர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் நார்தன் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சி பிரிவில் முதலிடத்தை பிடித்த ஜேர்மனி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஜேர்மனி-நார்தன் அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் கோம்ஸ் முதல் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் ஜேர்மனி 1-0 என ஆட்டத்தில் முன்நிலையை எட்டியது.

இரண்டாவது பாதி இறுதிவரை போராடிய நார்தன் அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முடிவில் ஜேர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் – போலந்து அணிகள் மோதின. இதில் உக்ரைன் 0-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. வெற்றிப்பெற்ற போலந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

‘சி’ பிரிவில் ஜேர்மனி அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், போலந்து 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று 2வது இடத்தையும் பிடித்தன.

இதன் மூலம் முதல் 2 இடங்களை பிடித்த ஜேர்மனி, போலந்து அணிகள் ரவுண்ட் ஆப் 16 (நாக்-அவுட்) சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியடைந்த உக்ரைன் அணி, சி பிரிவின் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

தற்போது நார்தன் அயர்லாந்து அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்தது. அந்த அணி மற்ற பிரிவுகளில் 3வது இடத்தை பிடிக்கும் அணிகளின் முடிவுக்காக காத்திருக்கிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: