யூரோ 2016 சர்வதேச கால்பந்து போட்டிக்கு எச்சரிக்கை!

பிரான்சில் ஆரம்பிப்பதற்கு இருக்கும் யூரோ 2016 சர்வதேச கால்பந்து போட்டியின் போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த மாதங்களில் பிரான்ஸ் மீது ஐ.எஸ்யினால் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் குறித்த கால்பந்து போட்டி தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. பல உலக நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கடந்த மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் ஐ. எஸ் தீவிரவாத தாக்குதலினால் 130க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை!
தொடர்ந்தும் தலைவராக நீடிக்க அலஸ்டைர் குக்கிற்கு வாய்ப்பு!
பயிற்சியாளராக சாதிப்பாரா ஜெயவர்த்தனே?
|
|