யூனிஸ், மிஸ்பா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

Pak V WI - PAK Won the Series-Misbah Farewell Friday, May 19th, 2017

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

கடந்த மே 10 ஆம் திகதி முதல் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான நேற்று (14) பாகிஸ்தான் அணி 101 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதனை அடுத்து தொடர் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பாகிஸ்தான் வசமானது.

இப்போட்டித் தொடரை அடுத்து, பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஉல் ஹக், மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தனர்.

பாகிஸ்தான்

1 ஆவது இன்னிங்ஸ் 376

2 ஆவது இன்னிங்ஸ் 174

மேற்கிந்திய தீவுகள்

1 ஆவது இன்னிங்ஸ் 247

பாகிஸ்தான் அணி தமது இரண்டாவது இனிங்சில் 8 விக்கட்டுகள் இழந்த நிலையில் 174 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 202 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன்போது, இறுதிநாளுக்காக வீசப்பட வேண்டியிருந்த ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில், அதற்கு முந்திய யசிர் ஷாவின் ஓவரின் இறுதிப் பந்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் இறுதி விக்கெட்டான கேப்ரியல் ஆட்டமிழந்ததன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியமை விசேட அம்சமாகும்.