யுவராஜ் சிங்குக்கு 3 கோடி ரூபாய் பாக்கி !

1497599621-7241 Wednesday, October 11th, 2017

இந்திய அணி வீரர் யுவராஜ் சிங்குக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ 3 கோடி பணம் பாக்கி வைத்துள்ள நிலையில் அதை பெறுவதற்கு தாயுடன் சேர்ந்து யுவராஜ் சிங் முயன்று வருகிறார்.

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட யுவராஜ் சிங் மீண்டும் அணியில் இடம் பெற கடுமையாக முயன்று வருகிறார்.

கடந்த 2016 டி20 உலக கிண்ண போட்டியின் போது யுவராஜ் சிங்குக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வருடம் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டிகளின் முதல் ஏழு ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.பிசிசிஐ விதிகளின் படி ஐபில் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் இந்திய அணிக்காக விளையாடும் போது காயம் ஏற்பட்டு அதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் அதற்கான நஷ்ட ஈடு பணத்தை குறித்து வீரருக்கு பிசிசிஐ கொடுக்கும்.அதன்படி யுவராஜ் சிங்குக்கு 3 கோடி பணம் வழங்க வேண்டும். ஆனால் அவருக்கு பணம் இன்னும் வழங்கப்படவில்லை.அதே ஐபில் சீசனில் காயம் காரணமாக ஐந்து போட்டிகளில் விளையாடாத ஆஷிஷ் நெகராவுக்கு மட்டும் பிசிசிஐ பணம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.இது குறித்து யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு பலமுறை கடிதம் அனுப்பியும் சரியான பதில் வரவில்லை.அவரின் தாய் பிசிசிஐ அதிகாரிகளுடன் போனில் பலமுறை பேசியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், தவறான தகவல் மாற்றத்தால் இப்பிரச்சனை நேர்ந்திருக்கலாம்.காப்பீடு குறித்த ஆவணங்களை யுவராஜ் சரியாக சமர்பிக்காதது கூட காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.