யுத்த தாங்கியில் இயந்திர கோளாறு: போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அணி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/10..jpg)
சீனா , இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளின் பங்கேற்பில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுற்ற சர்வதேச போர் விளையாட்டு விழாவில் ரஷ்யா வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது இடம்பெற்ற 28 நிகழ்வுகளின் 17 ல் ரஷ்யா வெற்றிப் பெற்ற நிலையில் , சீனா இரண்டாம் இடத்தையும் கஸகஸ்தான் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
அஜர்பைஜான், பெலோருஸ், எகிப்து, ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் முறையே அடுத்த இடங்களை பெற்றுள்ளன.இந்திய அணியினர் போட்டிக்காக பயன்படுத்திய இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டீ -90 ரக யுத்த தாங்கியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்திய அணியினருக்கு குறித்த போட்டியில் இருந்து விலக நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திரேலியாவின் தலைவரானார் பிஞ்ச்!
தடகளப்போட்டியில் எம்.மனுஜாவிற்கு தங்கம்!
இலங்கை – ரஷ்யா இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களைபலப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் நாமலின் ...
|
|