யாழ் மாவட்ட  GPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி! 6 அணிகளை 6 உரிமையாளர் வாங்கியுள்ளனர்!

Friday, May 27th, 2016

யாழ் மாவட்டத்தில், முதன் முதலாக யாழ் மாவட்டத்திற்குள் இயங்க கூடிய முன்னணி துடுப்பாட்ட கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 42 வீரர்களை கொண்ட  GPL(Grasshoppers Premier League) என்ற துடுப்பாட்ட சுற்றுப்போட்டியை  கிராஸ் கொப்பெர்ஸ் (Grass Coppers) விளையாட்டு கழகம் நடத்த உள்ளது.

இந்த GPL சுற்று போட்டி மறைந்த விளையாட்டு வீரர்களான ரொஹான் மற்றும் சங்கர் ஞாபகார்த்தமாக நடத்தப்படுகிறது .

ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ள GPL இல் விளையாட உள்ள ஆறு அணிகளையும் 22/05 அன்று ரில்கோ நகர விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் ஆறு உரிமையாளர்கள் வாங்கியுள்ளார்கள்.

அணிகளும் அவற்றினை வாங்கியோரின் விபரமும்

  1. Supper Riders: யாழ்மாவட்டத்தின் பிரபல வரத்தகர் ESP நாகரத்தினம்  ,
  2. Special Kings :பிரபல பௌதிகவியல் ஆசிரியர் குமரன் ,
  3. 3.Top Challengers:எயார்ரெல் டிஸ்டிபியூடேர்ஸ்  ,
  4. Leap Cutters:ரில்கோ யாழ் நகர விருந்தினர் விடுதி ,
  5. Fast Dolphins  :பார்ஹாத் ஹனிபா  ,

6 Deep Divers : சிவரதன் , மதனரூபன் , திருக்குமார் , தமிழரசன் ,ஜெயபாலன் ( லண்டன்)

முதலில் ஏல அடிப்படையில் வீரர்கள் கேட்கப்படுவதில்லை என்று தீர்மானித்திருந்தும், பின்னர் தங்கள் அணிக்கு தாங்கள் விரும்பும் வீரர்கள் தேவை என்ற உரிமையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க போட்டியில் ஏலம் நடைபெற்றது . அதிக பட்சம் 11000 ரூபாவுக்கு ஒரு வீரரும், 5000-9500 வரை பலரும் வாங்கப்பட்டது குறிப்பிட தக்கது . முதலாவது GPL போட்டியின் ஏலம் மூலம் வரும் வருமானம் முழுவதும் வன்னிப்பகுதியில் உள்ள சமூக சேவை நிறுவனமான அன்புநெறிக்கு வழங்கப்படும் .

யாழ் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர்களை கௌரவிக்கும் முகமாக பெரும்பாலானோர் இந்த சுற்று போட்டியில் பயிற்றுனர்களாகவும், முகாமையாளர்களாகவும்,நடுவர்களாகவும் உள்வாங்கப்பட்ட சுற்று போட்டியாக இந்த GPL சுற்றுபோட்டி அமைந்துள்ளது .

GPL போட்டியின் மூலம் யாழ் மாவட்ட துடுப்பாட்ட வீரர்களுக்கு புது உற்சாகத்தையும் கொடுப்பதோடு தொழில்முறை விளையாட்டிற்கான அத்திவாரமாகவும் அமையும் என்பதில் மாற்று கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை

12 123 13234

Related posts: