யாழ். மாவட்ட பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி: அரையிறுதிக்குத் தகுதி பெற்றது!

Friday, March 2nd, 2018

மாவட்டங்களுக்கு இடையே இடம்பெற்றுவரும் தேசிய ரீதியிலான கிரிடா சக்தி கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். மாவட்ட பெண்கள் தெரிவு அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

கொழும்பில் இப்போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. யாழ். மாவட்ட அணி முதல் போட்டியில் காலி மாவட்ட அணியை 28:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

காலிறுதியாட்டத்தில் குருநாகல் மாவட்ட அணியை 30:18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

இன்று காலை இடம்பெறவுள்ள அரையிறுதியாட்டத்தில் யாழ். மாவட்ட அணி மாத்தறை அணியை சந்திக்கவுள்ளது.

Related posts: