யாழ். மாவட்டச் செயலகம் சதுரங்கத்தில் சம்பியனானது!

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடரில் இரண்டு பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி கிண்ணம் வென்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் உள்ள ரங்கில் அண்மையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக அணி முதலிடத்தையும் கிளிநொச்சி மாவட்டச் செயலக அணி இரண்டாமிடத்தையும் முல்லைத்தீவு மாவட்டச் செயலக அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
ஆண்கள் பிரிவு சதுரங்கத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக அணி முதலாம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்டச் செயலக அணி இரண்டாமிடத்தையும் முல்லைத்தீவு மாவட்டச் செயலக அணி மூன்றாமிடத்தையும் பெற்றன.
Related posts:
பாகிஸ்தான் அணி தலைவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை!
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி!
ஆரோன் பின்ச்சின் அடுத்த கட்ட நடவடிக்கை..!
|
|