யாழ். பிரதேச செயலகம் கால்பந்தில் சம்பியனானது!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி சம்பியனானது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஓர் கோலைப் பதிவுசெய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக அணி.
Related posts:
கல்வி அமைச்சு நடத்தும் விளையாட்டுப் போட்டி!
கிளிநொச்சி மத்திய மகா வித்தி. 8 இலக்குகளால் அதிரடி வெற்றி!
சூடுபிடிக்கும் காற்பந்து உலகக்கிண்ண கலம் - காலிறுதிக்குள் நுழைந்த முதல் இரு அணிகள்!
|
|