யாழ். பல்கலை கிரிக்கெற் அணி கிண்ணத்தை வென்றது!

Tuesday, October 11th, 2016

யாழ். பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத்தில் யாழ். பல்கலையே சம்பியனானது. யாழ். பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் இந்த இறுதியாட்டம் நடைபெற்றது. யாழ். பல்கலைக் கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். பல்கலைக் கழக அணி 49.5 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஜெனந்தன் 55 ஓட்டங்களையும், ருக்மன் 49 ஓட்டங்களையும், டிலக்சன் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பில் மயூரன், அலன்ராஜ் இருவரும் தலா 3 இலக்குகளையும் ஜெரிக், கிருபாகரன் இருவரும் தலா 1 இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 42.4 பந்து பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதையடுத்து 45 ஓட்டங்களால் யாழ். பல்கலைக் கழக அணி வெற்றி பெற்று சம்பியனானது. அதிகபட்சமாக ஜேம்ஸ் 32 ஓட்டங்களையும், ஜெரிக் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குலசூரிய 4 இலக்குகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாகவும் சிறந்த பந்துவீச்சாளராகவம் யாழ். பல்கலைக் கழகத்தை சேர்ந்த குருகுல சூரிய, தொடராட்ட நாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் யாழ். பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஜெனந்தனன், சிறந்த களத்தடுப்பாளராக சென்றலைட்ஸ் அணியைச் சேர்ந்த ஜெரிக்துசாந் ஆகியோர் தெரிவாகினர்.

cricket_bat_and_ball

Related posts: