யாழ்.இந்து மகளிர் இறுதிக்குத் தகுதி! 

Thursday, May 24th, 2018

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்துக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி தகுதி பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது.

முதல் கால்பாதியில் இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றன. இரண்டாம் கால்பாதியில் 5:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்து மகளிர் கல்லூரி அணி முன்னிலை வகித்தது.

மூன்றாவது கால்பாதியை 12:00 என்ற அடிப்படையிலும் நான்காவது கால்பாதியில் 17:02 என்ற புள்ளிகளின் அடிப்படையிலும் இந்து மகளிர் கல்லூரி அணி வசப்படுத்தியது. இறுதியில் 38:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது இந்து மகளிர் கல்லூரி அணி.

Related posts: