யாழ்.இந்துக் கல்லூரி அரையிறுதிக்குத் தகுதி!

Jaffna-Cricket Tuesday, February 13th, 2018

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கங்கள் நடத்தும் 13 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற காலிறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக கிரிசாந் 36 ஓட்டங்களையும் பிரசாந் 26 ஓட்டங்களையும் சயந்தன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் சார்பில் கஜன், பிரியந்தன் ஆகியோர் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 32 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதிக பட்சமாக யோகிசன் 52 ஓட்டங்களையும் கவிவர்மன் 38 ஓட்டங்களையும் பிரியந்தன் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூட்டன், கிரிசாந், யுவேன், சயந்தன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!