யாழ்ப்பாணம் மஹாஜனாக் கல்லூரி அனீதா மீண்டும் சாதனை!

Sunday, October 16th, 2016

கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 2016 பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணம் மஹாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.அனீதா கோலுன்றிப் பாய்தலில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

 கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 2016 பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் (16) இன்றாகும். நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டு சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. யாழ்ப்பாணம் மஹாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.அனீதா , அம்பிட்டிய மகாவித்தியாலயத்தை சேர்ந்த அனுருத்த சிறிமால் ஆகிய வீர வீராங்கனைகள் சாதனைகளை நிலைநாட்டினார்கள்.

21 வயதிற்கு உட்பட கோலுன்றிப் பாய்தலில பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. அனீதா இந்த சாதனையைப் பதிவு செய்தார்.

100 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் அம்பிட்டிய மகாவித்தியாலயத்தை சேர்ந்த அனுருத்த சிறிமால் சாதனையை நிலைநாட்டினார். ஆசிய கனிஷ்ட பொதுநலவாய ஒன்றிய இளைஞர் மற்றும் சர்வதேச கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்கள் இந்தப் போட்டியில் முதலாம் இடத்திற்கு தெரிவானதுடன் தங்கப்பதக்கங்களையும் கைப்பற்றினார்கள்

42aab520a57dbc4e97184d3644dcedee_L

Related posts: