யாழ்ப்பாணம் சுப்பர் லீக்கின் முதலாவது பருவகாலப் போட்டிகள் ஆரம்பம்!

Tuesday, January 15th, 2019

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுப்பர் லீக் என்னும் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முதலாவது பருவகாலப் போட்டிகள் 12 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானங்களில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் எஸ்.விக்னராஜாவும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் எஸ்.நிமலனும் கலந்துகொண்டனர்.

இந்தச் சுற்றுப்போட்டியின் போட்டிகள் யாவும் கொக்குவில் இந்துக் கல்லூரி  மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஏ பிரிவில் ஜப்னா பந்தேர்ஸ், பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ், அரியாலை வோரியர்ஸ், நல்லூர் பிறவுண் கொஸ் அணிகள் உள்ளன.

பி பிரிவில் வேலணை வேங்கைகள், கொக்குவில் ஸ்ரார்ஸ், பண்ணை ரில்கோ கிளாடியேற்றர்ஸ் மற்றும் ரில்லியூர் ரைரன்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன.

முதலாவது பருவகாலப் போட்டியில் பங்குபற்றுவதற்கான அணிகளின் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஏலம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

Related posts: