யாழ்ப்பாணத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம்!

Wednesday, January 18th, 2017

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலங்க சுமதிபால யாழ்ப்பாணத்திற்கு  மேற்கொண்ட விஜயத்தின்  போது வடமாகாணத்தின் முக்கிய தேவையாக இருந்து வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமென்று தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டின் தேசிய அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இதற்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படும். 2022ம் ஆண்டளவில் இந்த மைதானத்தை திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும்  அவர் தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது   தலைவர் திலங்க சுமதிபால வடமாகாண சபை நிருவாகத்தினருடனும் விரிவாக பேச்சுவார்;த்தைகளை நடத்தியுள்ளார்.

galle

Related posts: