யாழில் கால்பந்தாட்ட இறுதியாட்டம்!
Sunday, February 24th, 2019உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 9 பேர் பங்கு கொண்ட கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதியாட்டம், மற்றும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டங்கள் இன்று உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இடம் பெறும். இதில் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து, கொற்றவத்தை றேஞ்சசர்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு இடம் பெறும் இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கம்பர் மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
Related posts:
அணி அகில இலங்கை ரீதியில் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியது மூளாய் விக்டோறி விளையாட்டுக் கழகம்!
தவறை ஏற்றுக்கொண்டார் தன்வீர் அஹமட்!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டிகள் நாளை!
|
|