யாருக்கு மகுடம் – இன்று திருவனந்தபுரத்தில் பலப் பரீட்சை!

Tuesday, November 7th, 2017

இந்திய – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான  ரி-20 போட்டி இன்று திருவநந்தபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப் பெற்று சமநிலையில் உள்ளன எனவே இது தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி தொடர்பில் விவாதங்கள் இடம்பெறுகின்றன

கடந்த போட்டியில் அவர் 37 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும் கூட, அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது அவரது துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கவில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

எனவே இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுவதில் ஐயம் இருக்கும் அதேநேரம், அல்லது அவரது துடுப்பாட்ட வரிசை இலக்கம் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது

அத்துடன் இந்திய அணி மொஹமட் சிராஜிக்கு பதிலாக குல்திப் யாதவை இன்று இணைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நியுசிலாந்து அணியில் தொம் லதமை மீளிணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அணித் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: