யங்ஹென்றிஸை வீழ்த்தி பாடும்மீன் சம்பியனானது!

Wednesday, June 13th, 2018

குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் நடத்திய தூயவொளி வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடும்மீன் அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடும்மீன் அணி மோதியது. ஆட்டத்தின் 7 ஆவது நிமிடத்தில் யங்ஹென்றிஸ் அணியின் முதலாவது கோலைப் பதிவுசெய்தார் தனேஸ். ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் யங்ஹென்றிஸின் இரண்டாவது கோலை மகிபன் பதிவு செய்தார். 40 ஆவது நிமிடத்தில் கீதன் பாடும்மீன் அணியின் முதலாவது கோலைப் பதிவுசெய்ய முதல் பாதியின் முடிவில் 2:1 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸ் அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் குருநகர் பாடும்மீன் அணியின் இரண்டாவது கோலையும் கீதன் பதிவுசெய்தார். தற்போது கோல் கணக்கு 2:2. மாற்றங்கள் ஏற்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா இரு கோல்களைப் பெற்றதையடுத்து சமநிலைத்தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 7:6 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.

சிறந்த வீரனாக குருநகர் பாடும்மீன் அணியின் கீதன், சிறந்த கோல் காப்பாளராக இளவாலை யங்ஹென்றிஸ் அணியின் கோல் காப்பாளர் அமல்ராஜ் தெரிவாகினர்.

Related posts: