மோசமான அனுபவம் குறித்த சந்திமால் கருந்து!

Tuesday, August 15th, 2017

எதிர்காலம் தொடர்பில் ​சாதகமாக எண்ணுவதாகவும் தோல்வியின் பொறுப்பை தான் ஏற்பதவாகவும் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்.இதேவேளை , தனது 8 வருட கிரிக்கட் வாழ்வில் தான் எதிர்கொண்ட மிக மோசமான அனுபவம் இதுவென சந்திமால் இதன்போது தெரிவித்திருந்தார்.மேலும், போட்டியில் படுதோல்வியடைந்தது குறித்து அனைத்து இலங்கை ரசிகர்களிடமும் தான் மன்னிப்பை கோருவதாக இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் குறிப்பிட்டிருந்தார்.

Related posts: