மோசமாக நடந்த வங்கதேச வீரர்கள்: வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் வாரியம்

Sunday, March 18th, 2018

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுகொள்ள முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சுதந்திர கிண்ண தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையும் வங்கதேச அணியும் மோதின.

இதில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நேரத்தில் எழுந்த நோ பால் சர்ச்சை பரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் வங்கதேச வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் நடந்து கொண்டார்கள்.

இந்நிலையில் வங்கதேச அணி வீரர்களின் செயலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கதேச வீரர்கள் நடத்தையை ஏற்று கொள்ள முடியாது.

போட்டியின் போது எழும் அழுத்தம் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் நேர்ந்து விட்டது என்பதை புரிந்துகொள்கிறோம்.

ஆனால் ஒரு கடினமான சூழ்நிலையை கையாளும் போது தொழில்முறை எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது அவசியமாகும். ஆனால் வங்கதேச அணி அதை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: