மொயீன் அலி சதம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள்!  

Friday, August 12th, 2016

பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினர்.

இதன் பின்னர் வந்த பேர்ஸ்டவ், மொயீன் அலி, வோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 328 ஓட்டங்கள் குவித்தது.மொயீன் அலி 152 பந்தில் 108 ஓட்டங்கள் (13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். பேர்ஸ்டவ் 55 ஓட்டங்களும், வோக்ஸ் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் சொகாலி கான் 5 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும், அமீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் பாகிஸ்தான் அணி  2 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அசார் அலி 36 ஓட்டங்களுடனும், அசாட் சாபீக் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related posts: