மைலோ கிண்ண கால்பந்து முடிவுகள்

Wednesday, October 25th, 2017

மைலோ கிண்ணத்துக்காக நடத்தப்படும் கால்பந்தாட்டத் தொடரில் வலிகாமம் லீக்குக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையே நேற்று முன் தினம் இடம்பெற்ற சில ஆட்டங’களின் முடிவுகள் வருமாறு

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கல்வயல் விநாயகர் விளையாட்டுக் கழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பிறைட்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் இரண்டு அணியினரும் தலா ஓர் கோலைப் பெற்றதால் சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. யூனியன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பிறைட்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மகாத்மா விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து வளர்மதி விளையாட்டுக் கழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் மகாத்மா அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சில்வெஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யங் ஹென்றிஸ் அணி வெற்றிபெற்றது.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அண்ணா விளையாட்டுக் கழக அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நவாலி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கண்ணகி விளையாட்டுக் கழக அணி மோதிய ஆட்டத்தில் நவாலி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக் கழக அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சில்வெஸ் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அராலி மாவத்தை விளையாட்டுக் கழக அணி மோதிய ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஓர் கோலைப் பெற்றதால் சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் அராலி மாவத்தை விளையாட்டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து மாதகல் ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மோதிய ஆட்டத்தில் மாதகல் ஐக்கிய விளையாட்டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காக்கை தீவு ஆதவன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பாரதி விளையாட்டுக் கழக அணி மோதிய ஆட்டத்தில் காக்கை தீவு ஆதவன் விளையாட்டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related posts: