மைலோ கிண்ணத்தை வென்றது இசிப்பத்தான கல்லூரி!

Friday, July 15th, 2016

அகில இலங்கை 20 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி மைலோ கிண்ண ரக்பி போட்டியில் கொழும்பு இசிப்பத்தான கல்லூரி அணி வெற்றி பெற்றது.

கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் இசிப்பத்தான கல்லூரிக்கு மிடையிலான போட்டியில் இசிப்பத்தான கல்லூரி 47–12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இச்சுற்றுப்போட்டிக்கு பல்லாயிரக்கணக்காண ரசிகர்கள் போட்டியை காணவந்திருந்தனர்.

இப்போட்டிகளுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேக்கர மற்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் உப தலைவர் நோமன் கன்னங்கர அந்நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டு கிண்ணத்தை வழங்கினர்.

இப் போட்டியில் முதல் பாதியில் இசிப்பத்தான கல்லூரி அணி 19–07 புள்ளிகள் பெற்றது. இரண்டாமிடத்தை பெற்ற கொழும்பு ரோயல் கல்லூரிக்கான கிண்ணத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கி வைத்தார். இதேவேளை பிரதமர் கிண்ணத்தை இசிபத்தான அணி வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: