மைதானத்தில் தேனீக்கள் படையெடுப்பு – தரையில் படுத்து தப்பிய வீரர்கள்!

Saturday, June 29th, 2019

உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது 48 ஆவது ஓவரில் திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படை எடுத்தது.

தேனீக்கள் மைதான ஆடுகளப் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தன.

தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.

ஏற்கனவே இதே போல ஒருமுறை தென்ஆப்பிரிக்கா – இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: